இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வடக்குக்கான விஜயத்தின் போது முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சி படை முகாம்களின் கட்டளைத் தளபதியின் ஆளுகைக்குள் இருக்கும் மாங்குளம் படைமுகாமுக்கும் கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அமைந்திருக்கும் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்துக்கும் சென்று கொரோனா வைரஸ் தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
வருகின்ற தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் இராணுவ அதிகாரிகள் இராணுவ படைவீரர்கள் ஆகியவர்களுடன் சுமுகமான முறையில் கலந்துரையாடல் மற்றும் கொரோனா வைரசுடன் போராடிக்கொண்டிருக்கும் இராணுவ அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தின் இராணுவ தலைமைப் பீடத்துக்கு சென்று கொரோனா வைரஸ் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலும் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
© Yarlmedia.com. All Rights Reserved.