
முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்படவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் கொரோனா வைரஸ் பரவலால் சிலர் உயிரிழந்து விட்டதாக பீல்ட் மார்ஷல் பொன்சேகா பேசியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதனையடுத்து தவறான தகவல்களை பொது மக்களிடையே பரப்பி குழப்பத்தினை விளைவித்துவருகிறார் என ஆளும் தரப்பினர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், அவரின் கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இச்சூழ்நிலையில் இன்று காலை 9.30 அளவில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அவர் அழைக்கப்படவுள்ளார்.